×

திருவெண்காட்டில் நிலக்கடலை, எள் குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு

சீர்காழி. மார்ச் 2: திருவெண்காட்டில் விவசாயிகளுக்கு நிலக்கடலை, எள் குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் நிலக்கடலை மற்றும் எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்னும் தலைப்பில் பண்ணை பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி வரவேற்புரையாற்றினார். பின்னர் பண்ணைபள்ளி பயிற்சி வகுப்புகளைப் பற்றி எவ்வாறு அவை ஆறு வாரங்களாக பிரித்து விதை முதல் விதை வரையிலான தொழில்நுட்பங்களை அளிக்க இருப்பதாக கூறினார்.

முதல் நாள் பயிற்சி வகுப்பில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர் நிலக்கடலை பற்றியும், வேளாண் திட்டங்களை பற்றியும், வேளாண் அடுக்கு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல பேராசிரியர் பாபு கலந்து கொண்டு பயிற்சி அளிக்கையில், தரமான விதைகளை எவ்வாறு தேர்வு செய்தல், நம் பகுதிக்கு ஏற்ற பட்டம் மற்றும் இடைவெளி, விதை நேர்த்தி செய்தல், உரமிடுதல், ஜிப்சம் மற்றும் மணிலா பூஸ்டர் பற்றி பயிற்சி அளித்தார். எலி கட்டுப்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்களை பற்றி எடுத்துக்கூறினார். பின்பு வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன் மற்றும் சவுந்தர்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.

Tags : Groundnut ,Sesame ,Tiruvenkat ,
× RELATED எள்ளு பன்னீர் மஞ்சூரியன்