×

வேதாரண்யம் நகரில் குளத்தை ஆக்கிரமித்த ஆகாயதாமரை செடிகள்

வேதாரண்யம், மார்ச் 2: வேதாரண்யம் நகரில் உள்ள குளத்தில் ஆக்கிரமித்து ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது அக்கினி தீர்த்த குளம். இந்தக்குளம் கரியாபட்டினம் சாலையில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த குளத் பொதுமக்கள், நகராட்சி பங்களிப்புடன் ஓரளவு தூர்வாரப்பட்டது. முழுமையாக தூர்வாரப்படாததால் தற்போது குளத்தில் ஆகாயதாமரை செடிகள் படர்ந்து தண்ணீர் தெரியாதபடி காணப்படுகிறது. மேலும் குளத்தை சுற்றி கழிவு நீர் கலப்பதால் கொசு உற்பத்தி மையமாக திகழ்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vedaranyam Nagar ,
× RELATED வேதாரண்யம் பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா