குளித்தலை அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

குளித்தலை, மார்ச் 2: டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத்துறை இலக்கிய மன்ற விழா சார்பில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் வாய்ப்பாடு, இசைப் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழாய்வுத் துறை தலைவர் பேராசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பொறுப்பு இயற்பியல் துறை தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். தமிழாய்வுத் துறை பேராசிரியர்கள் முருகானந்தன், வைர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் கற்கும் மாணவர்கள் தமிழ் பாடல்களை இசையுடன் எவ்வாறு பாடுவது என்பது குறித்து இசை பயிற்சியாளர் தேன்மொழிதேவன் பயிற்சி அளித்தார் மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடல்களை இசையுடன் பாடுவதன் காரணமாக எளிதில் மனனம் செய்யப்படுகிறது தமிழில் இனிமை மற்றவர்களும் உணர்வதற்கு எளிதாக அமைகிறது. பாடல்களின் இனிமையை உணர்ந்து பாடுவதன் வாயிலாக மிகுநத நன்மை கிடைக்கிறது என்று விளக்கப்பட்டது. தமிழாய்வுத் துறைப் பேராசிரியர் ஜெய்சங்கர் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: