×

இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு இணையவழி பயிற்சி மாவட்ட மைய நூலகம் தகவல்

கரூர், மார்ச். 2: கரூர் மாவட்ட மைய நூலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின்கீழ் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு, சாலை ஆய்வாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் கல்லூரி விரிவுரையாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. டிஎன்பிஎஸ்சி, சாலை ஆய்வாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் தங்கள் பெயர், முகவரியை மார்ச் 10ம்தேதிக்குள், நேரடியாகவும், அல்லது 04324&263550 என்ற தொலைபேசி வாயிலாகவும் பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : E-Training District ,
× RELATED தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது