×

வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அச்சம்

கரூர், மார்ச். 2: கருர் வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களால் இந்த பகுதியினர் சிரமத்துக்கு உள்ளாகி வருவதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வெங்கமேடு இடையே ஈரோடு, கோவை போன்ற பகுதிகளுக்கு ரயில்கள் செல்கிறது. இதனால், சர்ச் கார்னர் அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், வெங்கமேடு மேம்பாலத்தை சுற்றிலும் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த பகுதியை சுற்றிலும் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவு உள்ளது. இந்நிலையில், வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் டாஸ்மாக் கடையும் செயல்படுகிறது. இந்த கடையின் அருகே பார் வசதி இருந்தாலும், பெரும்பாலானவர்கள், கடையில் சரக்கை வாங்கிக் கொண்டு, மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் நின்று கொண்டு சரக்கு அடிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், இரவு நேரங்களில் வேலை முடித்து செல்லும் அனைவரும் பீதியுடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். எனவே, மாநகரின் மையப்பகுதியில் இதுபோன்ற சூழல் நிலவுவதால், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான சீரமைப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Tasmac ,Vengamedu ,
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...