×

தென்காசி மாவட்டத்தில் 9 கிராம ஊராட்சிகள் தேசிய அளவிலான விருதுக்கு பரிந்துரை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

தென்காசி,மார்ச் 2:  தென்காசி மாவட்டத்தில் 9 கிராம ஊராட்சிகளுக்கு தேசிய அளவிலான விருதுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையிலான கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளின் வறுமை இல்லாத மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்ட ஊராட்சி, ஆரோக்கியமான ஊராட்சி, குழந்தைகளிடம் நட்பு பாராட்டும் ஊராட்சி, தண்ணீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, தூய்மையான மற்றும் பசுமையான ஊராட்சி, உட்கட்டமைப்புகளால் தன்னிறைவுப் பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்புடைய ஊராட்சி, சிறந்த நிர்வாகத் திறன்கொண்ட ஊராட்சி, மகளிருடன் நல்லிணக்கம் கொண்ட ஊராட்சி ஆகிய ஒன்பது கருப்பொருட்களில் திறம்பட செயல்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேசிய அளவிலான ஊராட்சி விருதுகள் வழங்க தகுதியான ஊராட்சிகளை பரிந்துரை செய்வதற்காக மாவட்ட ஊராட்சி செயல்திறன் மதிப்பீட்டுக்குழுக் கூட்டம் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆலங்குளம் வட்டாரத்தை சேர்ந்த வாடியூர், மருக்கலாங்குளம், அய்யனார்குளம், மாறாந்தை காடுவெட்டி, கீழவீராணம், மேலக்கலங்கல், குறிப்பன்குளம், அய்யனார்குளம். மேலவீராணம், புதுப்பட்டி, ஓடைமறிச்சான், மாயமான்குறிச்சி, குத்தப்பாஞ்சான் மருதம்புத்தூர், கடங்கனேரி, அச்சங்குட்டம், கருவந்தா, கீழக்கலங்கல், கிடாரக்குளம். குறிச்சாம்பட்டி, சீவலப்புரம் கரடியுடைப்பு, நல்லூர், நவநீத கிருஷ்ணபுரம், காவலாக்குறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்களால் கருப்பொருட்கள் தொடர்பாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள் மற்றும் குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இவைகளின் அடிப்படையில் தேசிய அளவிலான ஊராட்சி விருதுக்கு வாடியூர், மாறாந்தை, மேலக்கலங்கல், மேலவீராணம், மாயமான்குறிச்சி, கடங்கனேரி, கீழக்கலங்கல், சீவலப்புரம் கரடியுடைப்பு, காவலாக்குறிச்சி ஊராட்சிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tenkasi ,Collector ,Durai Ravichandran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...