×

புங்கனூரில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவுவிழா 378 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி நலத்திட்ட உதவிகள்

திருச்சி, மார்ச் 1: திருச்சி மாவட்டம் ரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவுவிழா நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் சார்பில் 378 பயனாளிகளுக்கு ரூ1.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார். புங்கனூரில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில், 378 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் பேசுகையில், ‘முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 57 பயனாளிகளுக்கு மலை தரிசு வகைபாடு மாற்றத்திற்கான ஆணையையும், 204 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 12 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களும், 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகல்களும், 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில், 30 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகையும், 20 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், 1 பயனாளிக்கு முதிர்கன்னியர் உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகையும், 5 பயனாளிகளுக்கு நலிந்தோர் நலத்திட்ட உதவித் தொகையும், 23 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு உழவர் அட்டையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு பண்ணைக் கருவிகள் மற்றும் பேட்டரிகைத் தெளிப்பான்களும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 4 பயனாளிகளுக்கு வெண்டை விதை, பவர் டிரில்லர் இயந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 1 பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கால்கள் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், இரண்டு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர நாற்காலி என மொத்தம் 378 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 40 லட்சத்து 22 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். அரசுத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளையும், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ (பொ) வேலுமணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், தாசில்தார் குணசேகரன், மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுதுறை உயர் அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கலெக்டர் வழங்கினார்

Tags : Bunganur ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்