பாசன மடைகளுக்கு ஷட்டர் விவசாயிகள் சங்கம் மனு

திருச்செந்தூர், மார்ச் 1:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு தலைவர் ராமையா, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வைகுண்டம் அணை தென்கால் பாசனம் கடம்பாகுளம் 5ம் எண் மற்றும் 8ம் எண் மடைக்கு ஷட்டர் அமைத்து தர வேண்டும். கடம்பாகுளம் பாசன மடைகள் 7, 9ஐ காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். கடையனோடை முதல் கீழகல்லாம்பரை வரை உள்ள கடம்பாகுளம் கரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். வைகுண்டம் அணை வடகால் பாசனம் குலையன்கரிசல், பெட்டைக்குளம் வரை நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்த விட வேண்டும். வைகுண்டம் அணை தென்கால் கடம்பாகுளத்திலிருந்து திருச்செந்தூர் ஆவுடையார்குளம் வரை விவசாயத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: