×

டவுன் வர்த்தக மையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் மேயர் பி.எம்.சரவணன் அறிவிப்பு

நெல்லை, மார்ச் 1:  நெல்லை டவுனில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வர்த்தக மையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயர் சூட்டப்படும் என மேயர் பி.எம்.சரவணன் தெரிவித்தார். நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் பேசியதாவது, ‘‘ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் நல்ல திட்டங்களை தந்து, நாட்டின் தலைசிறந்த முதல்வராக திகழும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாமன்ற கூட்டத்தின் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ரூ.447.75 கோடியில் நெல்லை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதி-2, பகுதி-3 பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் 2 லட்சத்து 14 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். நெல்லை புதிய பஸ் நிலையத்தில் முதல் தளத்தில் ஏலம் போகாத 6 கடைகளை இணைத்து பயணிகள் தங்கும் அறையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஒன்றிணைத்து பேரணி, உறுதிமொழி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறோம். மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கும் கவுன்சிலர்களுக்கு அகவிலைப்படியினை ரூ.800லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட தீர்மானித்துள்ளோம். நெல்லை மாநகராட்சி எதிரே கட்டப்பட்டு வரும் வர்த்தக மையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. வர்த்தக மையத்தின் மற்றொரு அரங்கத்திற்கு கா.சு.பிள்ளை பெயர் சூட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Mayor ,PM Saravanan ,Town Business Center ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...