முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

நெல்லை, மார்ச் 1: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இன்று (மார்ச் 1ம் தேதி) கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள்,  திமுக கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு, மாற்றத்திறனாளிகளுக்கு உதவிகள், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி, ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளிகளுக்கு புத்தாடைகள் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியும், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் என சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து முதல்வரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்று மாநகர திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: