×

விளாங்குடி மக்கள் நேர்காணல் முகாமில் 311 பயனாளிகளுக்கு ரூ.2.89 கோடி நலத்திட்ட உதவி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

திருவையாறு: விளாங்குடியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 311 பயனாளிகளுக்கு ரூ.2.89 கோடி நலத்திட்ட உதவியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். திருவையாறு வட்டம் விளாங்குடி ஊராட்சியில் “மக்கள் நேர்காணல் முகாம்” மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பழனியப்பன் வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது, முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில்,விளாங்குடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் இலவசவீட்டுமனைபட்டா,முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டாமாற்றம். கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 193 பறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள்மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேலும் பல்வேறு துறைகள் மூலம் ரூ.2 கோடியே 89 லட்சத்து 78 ஆயிரத்து 540 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 311 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, வருவாய் துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறைமற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். பின்னர், திருவையாறு பேரூராட்சியில் புதிய நூலககட்டிடம் கட்டுவதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, தஞ்சாவூர் ஆர்டிஓ ரஞ்சித், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பேரூராட்சி தலைவர் கஸ்தூரிநாகராஜன், மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் வேங்கடசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் விஜயா ராமதாஸ், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனார். முடிவில் விளாங்குடி ஊராட்சி தலைவர் கதிர்காமம் நன்றி கூறினார்.

Tags : Thanjavur District Collector ,Vilangudi People's Interview Camp ,
× RELATED பாபநாசம் தொகுதி மின்னணு வாக்குபதிவு...