புதுக்கோட்டை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவின் வாகன நிறுத்தும் போராட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் மோட்டார் வாகன தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவின் வாகன நிறுத்தும் போராட்டம் நடந்தது. மோட்டார் வாகன தொழிலை முறைப்படுத்த ஆட்டோ டாக்ஸி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். கார்ப்பரேட்டர்களுக்கு ஆதரவான மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை முழுமையாக திருத்த வேண்டும். பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு டோல்கேட் கட்டணம் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும். நலவாரியத்தை குளறுபடிகள் இன்றி செயல்படுத்தி அதன் பயன்கள் பலன்கள் ஓய்வூதியம் உள்ளிட்டவை உயர்த்தப்பட வேண்டும்.அரசு சார்பில் ஆன்லைன் ஆப் (செயலி) உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு பொறுப்பாளர் சாத்தையா தலைமையில் வாகனங்களை நிறுத்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காரையூரில் சவுந்தரராஜன் தலைமையில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: