×

ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், காரல் மார்க்ஸ் பற்றி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காந்தி பூங்கா எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அன்பழகன் நாகராஜ் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் ராமநாதன். நகர செயலாளர் இறைக்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

Tags : Communist Party ,of India ,Jayangkond ,
× RELATED அலுவலக தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்