×

தா.பழூர் பகுதிகளில் திடீர் மழையால் அறுவடை பணி பாதிப்பு விவசாயிகள் கவலை

தா.பழூர்: தா.பழூர் பகுதியில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது. காலை முதல் வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் திடீரென திரண்ட மேகங்களால் மழை பொழிந்தது. இந்த மழை பொழிவு கடலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும். முடிவுறும் தறுவாயில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் சற்று பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் வட்டார பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த மழை காரணமாக வயலில் ஈரப்பதம் உள்ளதாலும் கதிர்கள் நனைந்ததாலும் இயந்திரம் வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் இயந்திரம் வயலில் உள்ள சேற்றில் சிக்கும் என்ற அச்சத்தால் இயந்திரங்கள் வயலில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதிக மழை இல்லாத காரணத்தினால் நெல் சேதம் ஏற்ப்பட வாய்ப்பு இல்லை என்றாலும் வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்டது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tha.Papur ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்