சேலம்: சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியின், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமினை கல்லூரியின் தலைவர் சரவணன் துவங்கி வைத்து ரத்ததானம் அளித்தார். சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் ரத்தங்களை சேகரித்தனர். சுமார் 110க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரியின் விரிவுரையாளர்கள் ரத்ததானம் வழங்கினர். மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தானமாக அளித்த ரத்தத்தினை சரியான முறையில் பாதுகாப்பாக பெற்று, அதனை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் மாணிக்கம், கல்லூரியின் டீன் டாக்டர் கீதா, கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பேகம் பாத்திமா ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் சங்கர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். ...