திருச்சுழியில் அதிவேகத்தில் பறக்கும் டூவீலர்கள் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் அதிவேகத்தில் பறக்கும் டூவீலர்களை கண்காணிக்கும் பணியை போலீசார் தீவிரபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியில் காவல் துணைக்காணிப்பு அலுவலம் உள்ளது. இந்நிலையத்திற்குட்பட்டு திருச்சுழி,மா.ரெட்டியபட்டி,பரளச்சி உட்பட கீழ்குடி புற காவல் நிலையம் உள்பட 4 காவல்நிலையங்கள் இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்திற்கு உட்பட்டு சுமார் 150க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது மக்கள்தொகைகேற்ப போலீசார் எண்ணிகையை அதிகரிக்கப்படாமல் குறைந்தளவே போலீசார் உள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் குற்றங்களை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் 24 மணிநேரமும் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஆனால் தற்போது போலீசார் பற்றாக்குறையால் தொடர் கண்காணிப்பில் ஈடுபட முடியாமல் திணறி வருகின்றனர்.

அவ்வப்போது வாகன சோதணையில் ஈடுபடததால் மதுபோதையில் வேகமாக வருவோரை கண்டறிய முடியவில்லை, இதனால் திருச்சுழி பகுதியில் வருடத்திற்கு 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபடுவதால் ஓரளவிற்கு குற்றங்கள் கட்டுப்படுத்தபடுகிறது. எனவே குற்றச்சம்பவங்களை தடுக்க, அதிக வேகத்தில் செல்லும் டூவீலர்களை கண்டறிய போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: