×

நான் முதல்வன் நிகழ்ச்சி

ராமேஸ்வரம்: தமிழக முதல்வரின் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன் நிகழ்ச்சி’ ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. ராமேஸ்வரம் டாக்டர் அப்துல்கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுனர் குமுதா தலைமை வகித்தார். கல்லூரி உதவி பேராசிரியர்கள் ரமேஷ் குமார், கலீல் ரஹ்மான், பாஸ்கரன் உள்ளிட்ட பேராசியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கி பயிற்சி அளித்தனர். ராமேஸ்வரம், கரையூர், புது ரோடு, தங்கச்சிமடம்,பாம்பன், மண்டபம், உச்சிப்புளி பகுதிகளில் இயங்கும் அரசு பள்ளி மாணவர்கள் 80 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.


Tags :
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா