×

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்

சாயல்குடி:  மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என சாயல்குடி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாயல்குடி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கூட்டம் நடந்தது. தலைவர் மாரியப்பன் தலைமையும், துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ் முன்னிலையும் வகித்தனர். செயல் அலுவலர் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதம்: காமராஜ்: சென்னை மெரினாவில் கலைஞரின் பேனாவிற்கு நினைவு சின்னம் அமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தலைவர் மாரியப்பன்: இதனை அனைத்து கவுன்சிலர்களும் வழிமொழிந்ததால் ஒரு மனதாக தீர்மானம் இயற்றப்படுகிறது. மாணிக்கவள்ளி: சாயல்குடி 6வது வார்டில் போதிய தெருவிளக்கு, சாலை, குடிநீர் வசதி இல்லை. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபிதா அனிபாஅண்ணா.; 9வது வார்டு உள்ள சாயல்குடி, அருப்புக்கோட்டை சாலையிலுள்ள கண்மாய் கரை பகுதியில் சீமை கருவேல மரம் அடர்ந்து வளர்ந்து இடையூறாக உள்ளது. அவற்றை அகற்றி, நிலத்தை சீரமைத்து நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். மேலும் சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் தரைத்தள கூடம் அமைத்தல், குப்பை கிடங்கில் மேற்கூரை அமைத்து, தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கணக்கர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

Tags : Marina ,
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...