முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

திருமங்கலம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்சினி - முரளி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

எம்ஜிஆர் 106வது பிறந்தநாள், ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா அதிமுக 51வது ஆண்டுவிழாவையொட்டி ஜெயலலிதா பேரவை சார்பில் 51 ஜோடிகள் சமத்துவ சமுதாய திருமணம் கடந்த பிப்.23ம் தேதி நடைபெற்றது.

திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்சினி திருமணம் உள்ளிட்ட 51 ஜோடிகளின் திருமணத்தை முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைத்தார்.

நேற்று திருமண வரவேற்பு டி.குன்னத்தூரில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சண்முகம், அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, ஆனந்தன், கோகுலஇந்திரா, டாக்டர் சரோஜா, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், செந்தில்நாதன், முனியசாமி, குட்டியப்பா, இளங்கோவன், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், ஐடி அணி மண்டல பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: