×

மாணவ தூதுவர் பயிற்சி முகாம்

மதுரை: தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் மற்றும் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறை ஆகியவற்றின் மூலம் சொற்குவை மாணவத் தூதுவர் திட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சரவணஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் மலர்விழி மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முனைவர் பொன்.குமார் வாழ்த்துரை வழங்கினார். அகரமுதலி திட்ட இயக்குநர் முனைவர் விசயராகவன் சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயலாக்கம் குறித்து எடுத்துரைத்தார். இயக்ககத் தொகுப்பாளர் பிரபு விளக்கவுரையாற்றினார். இதில் ஏராளமான மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.



Tags : Student Ambassador Training ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது