திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை, அருள் வாக்கு அருள்வோர் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பையன், அருள் வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட செயலாளர் சாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் சோமசுந்தரம் பேசியதாவது: கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்க தொகையாக ரூ.10000 வழங்க வேண்டும். செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோயில் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராம கோயில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.