×

கரூர் மாவட்டத்தில் தொடர் விற்பனை அனுமதியின்றி மது விற்பதை தடுக்க நடவடிக்கை தேவை

கரூர்: கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தினமும் மது விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் கரூர், குளித்தலை, தென்னிலை மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 4 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 46 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...