வர்த்தகர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், பிப். 28:  விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கோபு தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகமது, மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் செந்தில், திட்ட மேலாளர் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர். விருத்தாசலம் நகரத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள், தவறுகள், முறைகேடுகள் குறித்து வர்த்தகர்கள் எழுப்பிய புகார்களுக்கு சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். பொறுப்பான நபர்கள் மட்டுமே வியாபாரிகளிடம் பேசி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வுகான வேண்டும்.   பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் சிரமத்தையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் ஆபத்தான பள்ளம் தோண்டி முடிக்காமல் உள்ள கழிவுநீர் பாதையை விரைந்து முடித்துவிட்டுதான் புதியதாக வேலை ஆரம்பிக்க வேண்டும். ஒருபக்கம் சாலையில் உள்ள கழிவுநீர்பாதையை முழுமையாக முடித்த பிறகுதான் எதிர்பக்கம் பள்ளம் தோண்ட வேண்டும்.

 பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறாக அமைய உள்ள கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். உரிய தீர்வு காணும் வரை, கடைகளின் முன்பாக கம்பி தடுப்பு வேலி அமைக்ககூடாது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: