×

ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி பேச்சு செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மகிழ்வனம் பூங்காவிற்கு வருகை

பல்லடம்: செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், பல்லடம் அருகே சங்கோதிபாளையம் கிராமத்தில்  அமைக்கப்பட்டுள்ள மகிழ்வனம் பூங்காவை பார்வையிட்டனர். பல்லடம் அருகே சங்கோதிபாளையம் கிராமத்தில் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகம், சங்கோதி பாளையம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து மகிழ்வனம் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் பூங்கா அமைத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

இந்த பூங்காவை செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் 64 பேர் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் மகிழ்வனம் பூங்காவை பட்டறிவு பயணத்தின் ஒரு பகுதியாக பார்வையிட்டனர். மேலும் அங்கு மரக்கன்றுகளை நட்டனர். கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவரும், மகிழ்வனம் அமைப்பின் தலைவருமான கா.வீ. பழனிச்சாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மகிழ் னம் அமைப்பின் செயலர் சோமு என்கிற பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, தாவரவியல் நிபுணர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோவில் அறக்கட்டளை கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Union Minister ,Kishanreddy ,Chengalpattu ,Panchayat Council ,Majavanam Park ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...