திருப்பூரில் 15 வேலம்பாளையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதுபோல மாநகரை சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு தூய்மை பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று காலை 15 வேலம்பாளையம் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.மேலும், 1-வது மண்டலம் வார்டு எண் 12, 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சொர்ணபுரி அவென்யூவில் நடந்து வரும் தூய்மை பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுபோல 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிலை மற்றும் பயன்பாடுகள் குறித்தும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

Related Stories: