திருச்சுழி, பிப். 28: திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியில் நேதாஜி கபாடி கிளப் மற்றும் கிராம பொது மக்கள் இணைந்து கபடி போட்டி நடத்தினர்.இப்போட்டியில் திருச்சுழி சுற்றியுள்ள 51 கிராம இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தோனுகாலை சேர்ந்த கபாடி அணியினர் கலந்து கொண்டு முதல் பரிசான 5 அடி உயரமுள்ள கப் மற்றும் மெடல் ஐந்தாயிரம் ரூபாயை பரிசை தட்டிச்சென்றனர்.