×

கூடலூர் நகர் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை: நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

கூடலூர், பிப். 28: கூடலூர் நகராட்சிப்பகுதியில் நான்கு இடங்களில் ரூ.25.51 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைப்பது என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடலூர் நகர்மன்றக்கூட்டம், தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நேற்று நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. துணைத்தலைவர் காஞ்சனா சிவமூர்த்தி, ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, சுகாதார அலுவலர் விவேக் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு மேலக்கூடலூர் தெற்கு கிராமம் பள்ளியங்குடி வனத்துறை பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வசித்துவரும் பழங்குடியினத்தவரான மலைவாழ் குடும்பங்களுக்கு வனத்துறை பகுதியில் வாழ்ந்து வருவதற்கு வருவாய் துறை மூலம் வசிப்பிட உரிமை வழங்க நகராட்சிக்கு தடை ஏதும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை கட்டணம் வசூல் செய்யும் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி மூலம் மறு ஏலம் நடத்துவது, கூடலூர் நகராட்சிப்பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பொதுக் கழிப்பறைகளில் மராமத்து பணிகள் மேற்கொள்வது, 2022 - 23ம் நிதியாண்டின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.25.51 லட்சத்தில் கூடலூர் நகராட்சியில் நான்கு இடங்களில் புதிதாக பேவர் பிளாக் சாலை, சிறு பாலம் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Paverblock ,Kudalur Nagar ,
× RELATED திருவாடானையில் வாரச்சந்தை பகுதியில் பேவர்பிளாக் அமைப்பு