×

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்: 2 பேர் கைது

காளையார்கோயில், பிப்.28:  காளையார்கோயில் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  காளையார்கோவில் அருகே காயா ஓடை கிராமத்தில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி 2 டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளை ஓட்டி வந்த விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அழகர் (33), கண்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி மகன் சவரிமுத்து சந்தோஷ்(27) காளையார்கோவிலை சுப்பிரமணி மகன் தெய்வக்கண்ணன்(40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அழகர் மற்றும் சவரிமுத்து சந்தோஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...