×

தா.பாண்டியன் நினைவுதின கூட்டம்

உசிலம்பட்டி, பிப்.28: அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியனின் இரண்டாம் ஆண்டு நினைவுதின அஞ்சலி கூட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் எம்.எஸ்.முருகன், முத்துவேல், அன்பரசு, இஸ்கப் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை முன்னாள் பதிவாளர் டேவிட்ஜவகர் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் இஸ்கப் மாநில துணைத்தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகர்சாமி, இஸ்கப் மாநில செயலாளர் எழுத்தாளர் இந்திரஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இராஜலெட்சுமி, தமிழ்ச்செம்மல் புலவர் வை.சங்கரலிங்கம், அரிமா முன்னாள் ஆளுநர் பொறியாளர் அ.அறிவழகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத்தலைவர் நந்தாசிங், சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் வி.விருமாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, திராவிட கழகம் மன்னர் மன்னன், பார்வர்ட் பிளாக் ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி செல்லக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையா சிறப்புரையாற்றினார். விழாவில் தா.பா. நினைவு அறக்கட்டளை சார்பில்வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெ.அன்பு கிறிஸ்டியானுக்கும், நல்லாசிரியர் விருது பெற்ற முருகேஸ்வரி பாலசுப்பிரமணி, கல்வி கொடையாளர் கணேசன் விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக ஜோதிபாசு நன்றி கூறினார்.

Tags : Tha ,Pandian Memorial Day Meeting ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை