×

வண்டியூர் கஞ்சா வியாபாரி கைது

மதுரை, பிப்.28: வண்டியூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.மதுரை வண்டியூர் சி.எம். நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி(50). இவர் சங்கர்நகர் சந்திப்பில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்துகொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த, மாநகர் மதுவிலக்கு பிரிவு எஸ்.எஸ்.ஐ. செல்வக்கண்ணன், சுப்ரமணியை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தார்.

Tags : Vandiyur ,
× RELATED யூடியூபர் டிடிஎப்.வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறை நோட்டீஸ்