திண்டுக்கல் நெட்பால் வீரர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல், பிப்.28: நாக்பூரில் 40வது தேசிய நெட்பால் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த நோவா அகஸ்டின், ஆரோக்கிய அருண் லியோ ஆகியோரை, தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் செல்வராசு, செயலாளர் வைஷாலி லோகேஸ்வரன், பொருளாளர் கண்ணன், மாவட்ட வன அலுவலர் பிரபு, ஆர்டிஓ பிரேம் குமார், மாவட்ட நெட்பால் சங்க தலைவர் செல்வகனி, செயலாளர் ஞானகுரு, இணை செயலாளர் ஹென்றி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க செயளாலர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் ரமேஷ் பட்டேல், செவன் டாலர் அறக்கட்டளை செயலாளர் மனோஜ் குமார், பொருளாளர் பிரான்சிஸ் மோசஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: