×

நீலகிரி எம்பி ஆ. ராசா தகவல் தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் புதிய மண் கொட்டும் பணி

ஊட்டி:  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு  நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை  காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை  வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்  பொருட்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா,  தமிழகம் மாளிகை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவைகள்  தயார் செய்வது வழக்கம். மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி,  பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதனை காண  வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா மேம்படுத்தப்பட்டு  வருகிறது.

குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு அதிகளவு சுற்றுலா  பயணிகள் வரும் நிலையில், கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணிகள் தற்போது  மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக  மலர் கண்காட்சி நடத்தப்படாத நிலையில், இம்முறை மலர் கண்காட்சியை நடத்த  தோட்டக்கலைத்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக, தற்போது  பூங்காவை தயார் செய்து வருகின்றனர். பூங்கா முழுவதிலும் 2 லட்சத்திற்கும்  மேற்பட்ட பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 35  ஆயிரம் தொட்டிகளிலும் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு  பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர சுற்றுலா பயணிகள் அமரும்  வகையிலும், விளையாடும் வகையில் தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்களை  தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சிறிய புல்  மைதானத்தில் தற்போது புதிய மண் கொட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த  புதிய மண் கொட்டினால், புற்கள் பச்சை பசேல் என பச்சை கம்பளம் விரித்தார்  போல், புற்கள் வளரும். இதற்காக, தற்போது புதிய மண் கொட்டும் பணிகளில்  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த புல் மைதானத்திற்குள் சுற்றுலா  பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiri ,Rasa ,Information Botanic Garden ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்