×

ராமாபுரம் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காவேரிப்பட்டணம், பிப்.28: ராமாபுரம் அரசு பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் தடுப்பு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத் தலைவர் சக்தி மாவீரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக காவேரிப்பட்டணம் எஸ்ஐ ராஜா மற்றும் எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். சாய் அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தி, மலர் பனந்தூர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் முருகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், போலீஸ் எஸ்ஐ ராஜா பேசுகையில், ‘மாணவ, மாணவிகள் நன்கு படித்து, உயர்நிலை பதவிக்கு வர, திட்டமிட்டு கவனத்துடன் படிக்க வேண்டும்,’ என்றார். தொடர்ந்து கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து, மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு புத்தகங்களை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர் ராஜேந்திரன், விக்ரம், சங்கீதா, சந்திரலேகா, கவிதா, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Drug Prevention Awareness Camp ,Ramapuram Government ,School ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி