அரசு கல்லூரியில் பேரவை துவக்க விழா

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில்வேதியியல் துறையின் பேரவை துவக்க விழாவானது கல்லூரியின் முதல்வர் ஸ்ரீகானப்பிரியா தலைமையில் நடைபெற்றது.வேதியியல் துறை தலைவர் முனைவர்.சாந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக லதா பரமேஸ்வரன் கலந்து கொண்டு ” வாழ்க்கை என்ற அனுபவம் ” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும்,விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது.

இக்கண்காட்சியில் இன்றைய ” சுற்றுச் சூழல் பாதுகாப்பு ” மற்றும் ” வெல்த் ப்ரம் வேஸ்ட் ” என்ற தலைப்பில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். கண்காட்சியின் நடுவர்களாக  கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் முனைவர். பாலன், கணிதவியல் துறை தலைவர் முனைவர்.பபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியினை மாணவ,மாணவிகள் கண்டு ரசித்தனர்.

Related Stories: