×

மூணாறு அருகே மறையூர் மலைப்பகுதியில் காட்டுத்தீ

மூணாறு, பிப். 27: கேரள மாநிலம் மூணாறு அருகே அமைந்துள்ளது மறையூர். இப்பகுதியில் உள்ள முருகன் மலையில் கற்கால எச்சங்களான முனியறைகள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளது. இது தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் மலையில் அமைந்துள்ள சிலுவையின் தாழ்வாரங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்தது.

இதனால் பாறைகளுக்கு இடையே குகை ஓவியங்கள் புகை பிடித்து மங்கின. வரலாற்று சிறப்புமிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் குகை ஓவியங்களும், முனியறைகளும் சில நாட்களாக அழிவின் பிடியில் சிக்கி உள்ளது. எனவே இப்பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karayur hills ,Munnar ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்