×

தேனி அருகே காமாட்சிபுரத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு

தேனி, பிப். 27: தேனி அருகே காமாட்சிபுரம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். தேனி அருகே காமாட்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று முன்தினம் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இக்கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணியாளர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, வைப்பறை, விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் ஷஜீனா கூறியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 1009 மெட்ரிக் டன்னும், டிஏபி 1121 மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 3,006 மெட்ரிக் டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும் பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின்போது, உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி, காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவ கடன் சங்க உதவி செயலாளர் மணிகண்டன், முதன்மை எழுத்தர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Co-operative Credit Society ,Kamachipuram ,Theni ,
× RELATED அண்ணாமலை மீதான விதிமீறல் புகார்...