×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருப்புத்தூர், பிப். 27: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் பெற்ற சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்வத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.

இதில் முக்கிய நிகழ்வாக கோயில் தெப்பக்குளப் படிக்கட்டிலும், குளத்தைச்சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்தாண்டிற்கான விழா நேற்று காலையில் உற்சவ பெருமாள் தங்ககீரிடம் அலங்காரத்தில் தேவி, பூமிதேவியருடன் கருங்கல் மண்டபம் எழுந்தருள கொடி மரம் அருகே விஷ்ணு பூத பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டு தெப்ப உற்சவ முதல் நாள் விழா துவங்கியது. மார்ச்.7ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூவலவரை துளசி மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோயிலின் பிரகாரத்தில் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனையும், வேண்டுதலையும் செய்து வழிபட்டனர்.

Tags : Thirkoshtiyur Perumal temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்...