×

3 ஆண்டுகாலம் நடைபெறும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரலாம்: விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோயில்களில் திருமுறைகளைக் குறைவின்றி ஓதிட ஏதுவாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடந்து வருகிறது. இதில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சி பெற விரும்புவோர், இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதி உடையர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பள்ளியில் சேர தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குரல் வளம், உடல் வளம் உடையவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnhrce.gov.in என்கிற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 27ம் தேதிக்குள் ஓதுவார் பயிற்சி பள்ளி, இணை ஆணையர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். …

The post 3 ஆண்டுகாலம் நடைபெறும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரலாம்: விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Oduwar Training School ,Chennai ,Commissioner ,Hindu ,Charities ,Kumaragurubaran ,Madurai ,Odhuvar Training School ,Charities Department ,Dinakaran ,
× RELATED டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர்...