கிருத்திகையை முன்னிட்டு வீரபத்ர சுப்பிரமணியர் சாமிக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம், பிப். 27: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள வீரபத்ர சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சுப்பிரமணியர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் மகாதீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி வள்ளி தேவசேனா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் சுப்பிரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் உள் பிரகார  உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லோகு அய்யர் சிறப்பு பூஜைகள் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லிக்குப்பம் வரசக்தி விநாயகர் கோயில், கைலாசநாதர் கோயில், திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோயில்,  வாழப்பட்டு விருத்திகிரீஸ்வரர் கோயில், மேல்பட்டாம்பக்கம் சுப்பிரமணியர் சுவாமி கோயில், விலங்கல்பட்டு சுப்ரமணியர் சுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் கிருத்திகை முன்னிட்டு சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Related Stories: