நீலகிரி பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பந்தலூர், பிப். 27: அய்யன்கொல்லியில் பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் மாங்கோடு ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது எனவும், இன்று எருமாடு பகுதிக்கு வரும் துணை பொதுச்செயலாளர் ராசா எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் பொபி (எ) குழந்தைவேல், பாக்கியநாதன், சந்திரா, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ், மாவட்ட பிரதிநிதி கணபதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி, முத்துசாமி, வினோத், கலைமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர், மாணவரணி துணை அமைப்பாளர் முரளி, தொண்டர் அணி துணை அமைப்பாளர் டேவிட், முன்னாள் ஊராட்சி துணை செயலாளர் குருநாதன், கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மகாவிஷ்ணு, கதிரேசன், கிச்சான் (எ) நாகையா, நாகராஜ், சந்திரமோகன், படசேரி தேவதாஸ், மகேந்திரன், மருதை, கருபையா, மோகன், தம்பா, துரைராஜ், ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: