அரசு திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நீலகிரி எம்பி ராசா பங்கேற்கிறார்

ஊட்டி, பிப். 27:இன்று நடைபெற உள்ள எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் நூற்றாண்டு விழாவில் நீலகிரி எம்பி ராசா பங்கேற்கிறார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் கூறியிருப்பதாவது : நீலகிரி தொகுதி எம்பி ராசா, இன்று 27ம் தேதி காலை 10 மணிக்கு ஊட்டி தமிழகம் மாளிகையில் வரும் அரசு திட்டங்கள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து 12 மணிக்கு கூடலூர் செல்கிறார். 3 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கையுன்னி, சேரம்பாடி செக்போஸ்ட் மற்றும் சுங்கம் ஆகிய பகுதிகளில் திமுக கொடியேற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும், மாவட்டத்திலுள்ள கழக நிர்வாகிகளும், கழக தோழர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தொடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் முபாரக் தெரிவித்துள்ளார்.

Related Stories: