×

எட்டயபுரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

எட்டயபுரம்.: எட்டயபுரம் அருகேயுள்ள கீழக்கரந்தையைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை. இவர் சம்பவத்தன்று காலை மேலக்கரந்தையில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற வேன் மோதியதில், படுகாயமடைந்த வேலுப்பிள்ளை  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியைச் சேர்ந்த கனிசெல்வம் என்பவர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுபிள்ளை உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags : Etaipuram ,
× RELATED காதல் திருமணம் முடித்த 26 நாளில்...