திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி தெற்குதெரு மாயாண்டி சுவாமி கோயிலில் கடந்த 23ம்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி 22ம்தேதி காலை 6மணிக்கு மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, மகா கணபதிஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், மகா விஷ்ணு ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜையும் மாலை 6மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 10 மணிக்கு யந்திரஸ்தாபனமும் நடைபெற்றது. 23ம்தேதி காலை 7.45 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 10மணிக்கு கடம் புறப்பாடு, விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சோனகன்விளை சிவ ராஜாசிவம் குழுவினர் செய்தனர்.
தொடர்ந்து மதியம் 1மணிக்கு விசேஷ அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. விழாவில் காலை, மதியம் அன்னதானமும், மாலை 6மணிக்கு பகவதி சேவை, சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. 24ம்தேதி முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏப்ரல் 11ம்தேதி மண்டலாபிஷேக நிறைவுநாள் பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு விசேஷ அலங்கார தீபாராதனையும் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.