×

திருச்சி அருகே போர்வெல் பணியின்போது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் அக்ரஹாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை போர்வெல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளார். அப்பொழுது முன்னதாக 3 அடி ஆழம் வரை குழிதோண்டும் போது சிலையின் தலை தென்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து தோண்டும் போது பழங்காலத்து ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அம்மன் சிலையை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனே லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஐம்பொன் சிலையை கைப்பற்றி லால்குடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ஐம்பொன் அம்மன் சிலை குறித்து நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்த சிலை என தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகு தெரிய வரும் என லால்குடி தாசில்தார் தெரிவித்தார். அம்மன் பச்சை பட்டினி விரதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும். இந்த 28 நாட்களும் கோயிலில் அம்பாளுக்கு தளிகை, நைவேத்தியம் படைப்பது கிடையாது. இந்த ஆண்டு வருகிற மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார். அந்த 28 நாட்களும் அம்மனுக்கு துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கபடுகிறது.

Tags : Aimbon Amman ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...