ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும் நகராட்சி மேலாளர் அறிவிப்பு கல்வித் துறையில் விளையாட்டு திறன் மேம்பட எடுக்கும் முயற்சிகள் சிறந்த பலன் அளிக்கும்

மன்னார்குடி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் ராமஜெயம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பூவைசாரதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் கோப்பை சிஎம் டிராபி சீருடை பணியாளர்கள், காவலர்களும், தீயணைப்புத் துறையினர் இன்னும் பிற மாநில அளவில் விளையாடக் கூடிய நிறைய விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு வழங்கப்படுகிறது. கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு துறை மூலம் நடத்தப்படும் போட்டிகள் குறைவு. சி.எம். ட்ராபியில் பள்ளிக்கல்வித் துறைக்குள் போட்டிகள் நடத்துவதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் முழுமையாக சென்றடையும்.

பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர் என 5 பிரிவுகளில் சிஎம் டிராபி சிறப்பாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில், அரசு ஊழியர் பிரிவை ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர் பிரிவு (பள்ளிக்கல்வித் துறை), சீருடைப் பணியாளர், காவல்துறை, தீயணைப்பு துறை, உள்ளிட்ட துறைப் பிரிவுகள் (சீருடைப் பணியாளர் பிரிவு) என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் போது மேலும் சிறப்பான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும். கல்வித் துறையில் விளையாட்டுத் திறன் மேம்பட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சிறந்த பலனை அளிக்கும். மேலும் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய போட்டிகளையும் (வயது வரம்பு பிரிவு - துறை வாரியாக பிரிவு) விளையாட்டின் மூலம் புத்துணர்வையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் மாற்றங்களுடன் விரிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: