மன்னார்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் டூவீலர், தள்ளுவண்டிகளுக்கு அனுமதி கிடையாது

மன்னார்குடி: மன்னார்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் டூவீலர், தள்ளுவண்டிகளுக்கு அனுமதி கிடையாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க சுமார் 29.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. இதையடுத்து, தேரடி பகுதியில் ரூ85 லட்சம் செலவில் தற்காலிக பெருந்துறை கட்டப்பட்டு கடந்த சில நாட்களு க்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தான துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் மன்னைசோழ ராஜன் தலைமையில் நகராட்சியில் நடந்தது. நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் முன்னி லை வகித்தார். இக்கூட்டத்தில், டிஎஸ்பி அஸ்வத் ஆன் டோ ஆரோக்கியராஜ், டவுன் எஸ்ஐ முருகன், டிராபிக் எஸ்ஐ சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், தினந்தோறும் காலை7.30 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை தற்காலிக பேருந்து நிலையம் அமைந்துள்ள வழியாக எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை. தனியார் வாகனங்கள், நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் தற்காலிக பேருந்து நிலையத் திற்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர் நன்றி கூறினார்.

Related Stories: