×

தேசிய அளவிலான கருத்தரங்கம்

சேலம்: சேலம் ஏற்காடு ரோட்டில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் `தற்கொலை-பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியின் தலைவரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத்தலைவருமான சரவணன் தலைமை வகித்தார். இதில், சினேஹா அறக்கட்டளையின் நிறுவனரும், மனநல மருத்துவருமான லக்ஷ்மி விஜயகுமார், மனநல ஆலோசகரும், தரு மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து நடந்த நிறைவு விழாவில், சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், விநாயகா மிஷன்ஸ் மருத்துவ கல்லூரி தடயவியல் துறைத்தலைவர் வள்ளிநாயகம், முன்னாள் தடய அறிவியல் துறை இயக்குநர் பாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  தேசிய அளவிலான இந்த கருத்தரங்கின் ஆய்வறிக்கையை கல்லூரியின் பேராசிரியர் பாலராமலிங்கம் சமர்ப்பித்தார். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம், டீன் கீதா, கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : National ,Seminar ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்