காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் வேளாண் துறை அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்: தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாகப்பட்டினம் நடந்தது.

மாநில தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயாளர் முத்துக்குமார் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் ரேணுகாதேவி வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை, வேளாண்விற்பனை மற்றும் வணிக துறை ஆகியவற்றில் அமைச்சுப் பணியாளர் மாறுதல் மற்றும் நியமனத்தில் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

நிர்வாக தவறுகள், விதிமுறைகளை மீறுவோர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பவானிசாகர் அடிப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலைத்துறை இயக்குநர், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர்கள் முருகானந்தம், பார்த்திபன், சுதாகர், வேங்கடவரதன், வெங்கடேசன், திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: