செம்பனார்கோயில்: செம்பனார்கோயில் அருகே மேலப்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜுரகரேஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று கார்த்திகையை முன்னிட்டு இந்த கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் செல்வ முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து ஆராதனையும், அர்ச்சனையும் நடந்தது. அப்போது கோயிலில் இருந்த முருக பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் படித்துக் கொண்டு கோயிலை 108 முறை வலம் வந்து உலக நன்மைக்காகவும், இயற்கை இடர்பாடுகள் தவிர்க்க வேண்டியும் கூட்டு வழிபாடு செய்தனர்.