×

கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 6ம் தேதி தேரோட்ட விழா நடைபெறுகிறது. கரூர் தாந்தோணிமலையில் புகழ் பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி தேரோட்ட விழாவும், மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

இதனடிப்படையில், கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நேற்று மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலர், உதவி ஆணையர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மார்ச் 1ம்தேதி வெள்ளி கருட சேவையும், 4ம்தேதி திருக்கல்யாண உற்சவ நிகழ்வும், 6ம்தேதி திருத்தேரோட்டமும், 8ம்தேதி தெப்பத்தேரோட்டமும், 9 மற்றும் 11ம்தேதி வெள்ளி கருட சேவையும், 13ம் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்வும், 15ம்தேதி ஊஞ்சல் உற்சவமும், 15மதேதி புஷ்பயாக நிகழ்வும் நடைபெறுகிறது.

இதில், மாசி மகத் தேரோட்டம் மற்றும் தெப்பத் தேர் ஆகிய நிகழ்வுகள் முக்கிய நிகழ்வுகளாக உள்ளதால் இந்த விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர், செயல் அலுவலர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

Tags : Masimag festival ,Kalyana Venkatramana Swamy Temple ,
× RELATED விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி